Saturday, March 03, 2007

காலை உணவு

இன்று காலை உணவுக்காக சென்ற பொழுது தட்டில் இடப்பட்டதை கண்ட உடன் பெண் பார்க்கும் படலம் தான் நினைவுக்கு வந்தது.


dry-fruit-kesarialoo bonda


ரவா கேசரியும் உருளைக்கிழங்கு போண்டாவும் ஒரு சேர பார்த்தால் வேறு என்ன நினைக்கத் தோன்றும்? முன் அனுபவத்தில் எழுதுவதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். திரைப்படங்களில் இருந்து கொண்ட பல விஷயங்களில் இதுவும் ஒன்று.

ஒரு கரண்டி கேசரியும், இரண்டு போண்டாக்களும் தின்றுவிட்டு 4-5 மணி நேரங்கள் வகுப்புகளில் கவனத்துடன் உட்கார்ந்திருக்க முடியும் என்று எப்படி தான் இவர்களுக்கு தோன்றியதோ? காலை உணவுக்கு செல்வதே கொஞ்சம் அபூர்வம் தான், இதில் இப்படியெல்லாம் வேறு செய்தார்களென்றால், என்ன செய்வது?

இப்படி வாராவாரம் டிப்பனை மட்டும் கொடுத்துக் கொண்டு வந்தால் பெண்ணை எப்பொழுது காட்டுவார்களாம்?

சொஜ்ஜியும், போண்டாவும் கொடுத்தால் மட்டும் பொதுமா? கூட தேங்காய் சட்னி இருந்தால் நன்றாக இருக்கும். தக்காளி சாஸ்(tomato sauce) சகிக்கவில்லை...

Comments: Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?