Wednesday, May 23, 2007

புடவை பார்த்தல்

புடவை பார்த்தல் என்பது திருமண வைபவங்களில் ஒரு முக்கியமான சடங்கு ஆகும். திருமண வீட்டார் தனது உற்றார் உறவினர்களுக்கு வாங்கி வைத்திருக்கும் புடவைகளை பார்த்து ஆராய்ந்து அங்கலாய்த்துக் கொள்வது, நம் வீட்டு பெண்களின் ஒரு முக்கியமான வேலை ஆகும்.

எனது புடவையில் ஜரிகை குறைச்சல்
எனது புடவையின் ஜரிகை design நன்றாக இல்லை
எனது புடவை நிறம் பளிச்சென்று இல்லை
இதே நிறத்தில் புடவை வாங்கிவிட்டார்களே, இந்த நிறத்தில் என்னிடம் வேறு இரண்டு புடவைகள் இருக்கிறதே
அவள் புடவை தான் நன்றாக இருக்கிறது
இன்னும் கொஞ்சம் புட்டா இருந்திருக்கலாம்
எனக்கு மேல்தாரி புடவை வாங்கிருக்கலாம்
நான் ஒரே அத்தை, எனக்கு வைர ஊசி புடவை வாங்கித் தந்திருக்கக் கூடாதா.

என பலவாறான குறைகளை (ஒன்றிரண்டு நிறைகளையும்) பரிமாறிக் கொள்வது நம் வீட்டு பெண்களின் உரிமை ஆகும்.

நிற்க, பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டு பெண்டிரை அழைத்து தாங்கள் திருமணத்திற்கு வாங்கி வைத்துள்ள புடவைகளையெல்லாம் காட்ட வேண்டியது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அப்படி காட்டும்போது மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடிக்காத புடவைகளை இரவோடு இரவாக மாற்றியும் விட வேண்டும். இது நடவாத பக்ஷத்தில் திருமணம் நின்றும் விடலாம்.

Comments:
இது எனக்கு தெரியாத சடஙகாக இருக்கிதே? என் திருமணத்தில் இது நடந்ததாக நினைவு இல்லை ! :) நல்ல வேளை !

Incidentally, you have been tagged !
 
Hahaha.. any bad experience??
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?